இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 11 அக்டோபர், 2010

செந்தமிழன் சீமான் அவர்களின் கைது குறித்து மக்களிடையே பரப்புரை மற்றும் பேரணி

செந்தமிழன் சீமான் அவர்களின் கைது குறித்து மக்களிடையே பரப்புரை மற்றும் பேரணி -தமிழீழ திரைப்பட உதவி இயக்குனர்கள் சங்கம்



மத்திய மாநில அரசுகளால் பழிவாங்கும் நோக்கோடு 85நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  செந்தமிழன் சீமான் அவர்களை விடுதலை செய்யக்  கோரி தமீழீழ ஆதரவு உதவி இயக்குனர்கள் வேலூர் நோக்கி இருச்சக்கர வாகன பேரணி மேற்கொண்டனர்.
5.10.2010 அன்று காலை 8மணிக்கு  சென்னை சாலிகிராமம் காமராஜர் சிலை அருகில் இருந்து பாலமுரளிவர்மன்,சண்முகம் தலைமையில் புறப்பட்ட பேரணி பிற்பகல் 2 மணிக்கு வேலூரை  அடைந்தது.இருங்காடுகோட்டை,திருப்பெரும்புதூர்,காஞ்சிபுரம்,ராணிப்பேட்டை,மற்றும் வேலூரின் நகரப்பகுதிகளில் செந்தமிழன் சீமான் அவர்களது கைது குறித்து பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.வழியெங்கும் முழக்கங்கள் எழுப்பிய தம்பிகளுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மத்திய மாநில அரசுகளால் பழிவாங்கும் நோக்கோடு எண்பத்து ஐந்து நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களை விடுதலை செய்யக் கோரி தமீழீழ ஆதரவு உதவி இயக்குனர்கள் வேலூர் நோக்கி இருச்சக்கர வாகன பேரணி மேற்கொண்டனர்.5.10.2010 அன்று காலை 8மணிக்கு சென்னை சாலிகிராமம் காமராஜர் சிலை அருகில் இருந்து பாலமுரளிவர்மன்,சண்முகம் தலைமையில் புறப்பட்ட பேரணி பிற்பகல் 2 மணிக்கு வேலூரை அடைந்தது.இருங்காடுகோட்டை,திருப்பெரும்புதூர்,காஞ்சிபுரம்,ராணிப்பேட்டை,மற்றும் வேலூரின் நகரப்பகுதிகளில் செந்தமிழன் சீமான் அவர்களது கைது குறித்து பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.வழியெங்கும் முழக்கங்கள் எழுப்பிய தம்பிகளுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.



புதன், 6 அக்டோபர், 2010

சார்லஸ் அந்தோணிக்கு உணர்வுள்ள சீக்கியர் ஜக்மோகன் சிங்கின் கடிதம்

அன்புள்ள் சார்லஸ் அந்தோணிக்கு,

உங்களது வாழ்வுரிமை, அடையாளம் மற்றும் விடுதலைக்கான போராட்டத்துக்கு எனது ஆதரவை தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள்.நீங்களும் உங்களது மக்களும் உயிர் வாழ எப்படிப்பட்ட போராட்டத்தில் தற்போது இருக்கிறீர்கள் என்பதை பஞ்சாபில் நடந்த போராட்டங்களை அருகில் இருந்து கவனித்தவன் என்ற முறையில் நான் நன்கறிவேன்.

ஊடகங்களில், உங்கள் தந்தை வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு நாள் நண்பர், மற்றொரு நாள் எதிரி. சில நாட்கள் அவர் பாதுகாக்கப்பட்டவர். இன்று அவர் கைவிடப்பட்டவர். சிலருக்கு அவர் தீவிரவாதி. பலருக்கு அவர் ரட்சகர். அவர் எப்படிப்பட்டவர் என்பதை வரலாறு தீர்மானிக்கட்டும் என்று விடுவதே நல்லது. நான் போர்க் குணம் மிக்க இனத்தைச் சேர்ந்தவன். போராட்ட குணத்துக்கு பெயர் பெற்றவர்கள் சீக்கியர்கள். பஞ்சாபில் உள்ள பெரும்பாலான அரசியல் தலைவர்கள் தங்களது வாயைத் திறக்கவில்லை என்றாலும், அச்சமின்றி அறிக்கை வெளியிடவில்லை என்றாலும், தமிழீழ விடுதலைப் போராட்ட வீரர்களின் துணிச்சல், உறுதி, போர்த் திறன் ஆகியவற்றை அங்குள்ள பலர் பாராட்டுகின்றனர். இதை நீங்கள் நம்பியே ஆக வேண்டும். சமீப காலமாக உங்கள் போராட்டம் சந்தித்து வரும் வீழ்ச்சி பற்றிய செய்தியைக் கேட்டு பெரும்பாலான சீக்கியர்கள் கவலை கொண்டுள்ளனர்.

போர் பகுதியில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற சில மணி நேரங்கள் மட்டுமே அளித்த நிலையில், உங்கள் மக்களும், வீரர்களும் இலங்கை ராணுவத்தின் விஷ வாயு குண்டு வீச்சுக்கும், ரசாயன குண்டு வீச்சுக்கும் ஆளாகியுள்ள நிலையில் உங்களுக்கு எனது ஆதரவை தெரிவித்து நான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.இலங்கையில் தமிழீழ மக்கள் படும் துன்பத்தால் மனம் நொந்து இந்தக் கடிதம் எழுதுகிறேன். துன்பப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் புகைப்படங்களைப் பார்த்து மலைகளே அசைய வேண்டும். ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. உங்கள் வலிகளையும் துன்பங்களையும் கண்டு கொள்ளாமல் மொத்த உலகமும் இயங்கி வருகிறது. அதற்கு 24 மணி நேர டி.வி. சேனல்களுக்கு நன்றி கூற வேண்டும்!.

தமிழீழ தாயகத்தை விட்டும், தமிழீழ வீரர்களை விட்டும் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் வெளியேறுவதைக் கண்டு எனது இதயம் அழுகிறது. இதை எழுதும் போது எனது உள் மன உணர்வுகளை வெளிப்படுத்த இது ஒரு வழி மட்டுமே என்ற குற்ற உணர்வே மிஞ்சுகிறது. இருந்தபோதிலும் ஒரு சீக்கியனாக என்னால் செய்ய முடிந்தது உங்களது போராட்டத்தில் உங்களுடன் சேர்ந்து கொள்வது மட்டுமே. எனது பிரார்த்தனையும், எனது வாழ்த்துக்களும் உங்களுக்கு உண்டு.

உலகில் உள்ள மற்ற அமைப்புகள் போன்று தமிழீழத்திற்கும் வரலாற்று ஆவணங்கள் இருந்தபோதும், இலங்கையில் துன்பப்படும் பல்லாயிரம் மக்களின் துயரை, வலியைத் துடைக்க பன்னாட்டு சமூகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தியா எப்படி சீக்கியர்கள், காஷ்மீரிகள், வடகிழக்கு மாநில மக்களின் போராட்டங்களை அழித்ததோ, அதே போல் இலங்கை அரசு உங்களது போராட்டத்தை பகல் நேரக் கொலை மற்றும் பேரழிவின் மூலம் நசுக்கி வருகிறது.

ஐரோப்பிய நாடுகளின் தலைநகரங்களில் வீதிகளில் இறங்கி போராடி இருக்கும் பேச்சுகளைத் தொடங்க வைத்த புலம் பெயர் தமிழர்களின் போராட்டம் இதயத்தை வருடுவதாக உள்ளது. குறிப்பாக நார்வே தலைமையிடம் கூர்மையாக வாதாடிய புலம் பெயர் தமிழர்களால் இம்.ஆஸ்லோவில் எம் மலம் பிரதமரின் அலுவலகத்தை நார்வே வாழ் புலம் பெயர் தமிழர்கள் முற்றுகையிட்டு, அரசாங்கத்துடன் வாக்குவாதம் செய்தனர். அப்போது, சர்வதேச வளர்ச்சிக்கான நார்வே அமைச்சர் எரிக் சோல்ஹைம், ‘என்னால் நார்வே தமிழர்களது உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் என்னால் மாயவித்தை புரிய முடியாது’ என்றார். இதை செய்திகளில் நான் படித்தேன். நார்வே அரசின் என்ஆர்கே பத்திரிகை நிருபர்கள் இது குறித்து கேள்வி கேட்ட போது, ‘என்னால் அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றிடம் மீண்டும் ஒருமுறை பேச இலங்கையில் போரை நிறுத்த ஏதாவது செய்ய முடியுமா என்று பார்க்க வேண்டும்’ என்றார். தமிழ் எழுத்தாளர் கே.பி.அறிவானந்தம் எரிக்கின் இந்த பதில் குறித்து அளித்த பதில்:‘மாய வித்தைகள் புரிய சோல்ஹைமால் முடியாமல் இருக்கலாம். ஆனால் குறைந்தபட்சம் அவர் தவறுகள் செய்வதில் இருந்து தள்ளி நின்றிருக்கலாம். முடிந்தவற்றை செய்வது மட்டுமே ராஜதந்திரம் என்பதாக இருக்கலாம்.

ஆனால் முடியாததையும் நடத்திக் காட்டுவதுதான் விடுதலைப் போராட்டம்’. இந்த பதில் மிகச் சரியானது. ஒரு காவியம் போன்றது.துணிவுக்கும், மனித உரிமை போற்றுதலுக்கும் ஸ்காண்டிநேவிய நாடுகள் பெயர் பெற்றவை. அதனால் தான் சமாதான பேச்சுக்கு நார்வேயை உங்கள் தலைமை தேர்ந்தெடுத்திருக்கும்.‘முக்கியமான கருத்தை நார்வே உணர்ந்து கொள்ளத் தவறிவிட்டது. சமாதான பேச்சில் நடுநிலை வகித்ததால், புலிகள் ஆயுதங்களை கீழே போடுமாறு கோரிக்கை விடும் இணைத் தலைமை நாடுகளுடன் சேர்வதில் நியாயம் இல்லை. கொழும்பின் இனப்படுகொலை கரங்களுக்குள் வன்னி மக்களை செல்லுமாறு கூறுவது பெரும் கவலை அளிக்கிறது. அவர்களுடைய செயல்முறைத் தோல்விகளால், பன்னாட்டு அமைதித் தூதுவர் என்ற மதிப்பை நார்வே குறைத்துக் கொண்டுள்ளது.

சுதந்திரமாகவும், வல்லரசுகளின் புவிசார் அரசியல் குறிக்கோளில் இருந்து விலகியும், உலக மனித குலத்துக்கு உண்மையாக நடந்து கொள்ள விரும்பியும் வருவதற்கு நார்வேக்கு இன்னும் நேரம் உள்ளது’ என்று நார்வேயின் தலையில் ஆணி அடித்தது போல் அறிவானந்தம் கூறியிருக்கிறார்.தொடர்ந்து துன்பப்படும் தமிழீழ மக்களானவர்கள், இந்தியா மற்றும் உலக நாடுகளின் வெளிப்படையானதும், மவுனமானதுமான ஆதரவால் சிங்களப் பேரினவாத ராணுவத்திடம் சிக்கிக் கொண்டுள்ளனர்.இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள ஈழத் தமிழர்களின் சகோதரர்களின் அபயக் குரல்கள் புறக்கணிக்கப்படுகின்றன. 13 தமிழ் சகோதரிகள் உங்களுக்காக சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கின்றனர். இந்தியா முழுவதும் தேர்தல் களேபரத்தில் உள்ள நேரத்தில் அவர்களைப் பற்றி இந்த ஊடகங்கள் கண்டு கொள்கின்றனவா?தமிழ்நாட்டில் உள்ள தலைவர்கள் பொய்யாகவும் ஏமாற்றும் விதமாகவும் குரல் கொடுக்கின்றனர்.

அவர்கள் நேர்மையாக உங்களை ஆதரிக்கிறார்களா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் உங்களுக்கு அவர்களைப் பற்றி நன்கு தெரியும்.தமிழ் தலைவர்களைப் போன்று இந்தியத் தலைவர்களும் உங்களுடனும் உங்களுடைய லட்சியத்துடனும் தங்கள் சாணக்கியத் தனத்தை காட்டி வருவதாக நான் கருதுகிறேன். இந்தியா உங்கள் நண்பனா, எதிரியா என உலகத்தால் தெளிவாக புரிந்து கொள்ள முடியாது. அந்த வகையில் இந்தியா இரட்டை வேடம் போடுகிறது. இலங்கை ராணுவத்துக்கு பயிற்சியும் ஆயுதமும் கொடுப்பதைத் தொடர்ந்து கொண்டே ஒன்றும் தெரியாதது போல் மென்மையாக நடந்து கொள்கிறது.

நான் பாதுகாப்பு ஆய்வாளர் கிடையாது. ஆனால், நார்வே தலைமையிலான அமைதிப் பேச்சு துவங்கியபோதே உங்கள் மக்களின் போராட்டத்துக்கு பெரிய அடி விழுந்து விட்டது. சீக்கியர்கள், காஷ்மீரிகள், நாகா, மிசோ மக்களின் போராட்டத்திலும் இந்தியா இந்த முறையையே கடைபிடித்தது. 9/11 சம்பவத்துக்குப் பிறகு உலகின் புவிசார் அரசியல் மாற்றமும் உங்கள் போராட்டத்தின் தன்மையை மாற்றிவிட்டது. இதுவும் கூட நார்வேயின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படக் காரணமாக இருக்கலாம்.கடந்த ஆண்டு இதே நேரம் கொசோவா என்ற புதிய நாடு பிறந்தது. அதற்கு ஓராண்டு முன்பு கிழக்குத் தைமூர் விடுதலை அடைந்தது. 2009-ல் தமிழீழம் விடுதலை பெறும் என்று நினைத்தேன்.

இந்த ஆண்டு அது நடைபெறாது போல் இருந்தாலும் எனக்கு இன்னும் நம்பிக்கை உள்ளது.உங்களுடைய போராட்டம் கடைசிக் கட்டத்தை அடைந்துவிட்டது என்று உலக அளவில் ஒரு தோற்றம் உள்ளது. கள நிலைமைகள் குறித்த உண்மைகள் தெளிவாகத் தெரியாத நிலையில் இருந்தாலும் உங்கள் போராட்டம் கடைசிக் கட்டத்தை அடைந்து விட்டதாக நான் நினைக்கவில்லை. உங்கள் போராட்டம் தொடர வேண்டும். உங்கள் சுதந்திரக் கொடியை தொடர்ந்து நீங்கள் தூக்கிப் பிடிக்க வேண்டும்.அமெரிக்க குடியுரிமை பெற்ற கோத்தபய ராஜபட்ச, பச்சை அட்டைதாரர் பொன்சேகா ஆகியோரின் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்காக வழக்குத் தொடருவதில் முன்னாள் அமெரிக்க அரசு வழக்கறிஞர் புரூஸ் ஃபெய்ன் வெற்றி பெற்றுள்ளார் என்று நம்புகிறேன்.

நியூயார்க்கில் உள்ள இனப்படுகொலை தடுப்பு அமைப்பு உலகில் உள்ள 8 நாடுகளில் இனப்படுகொலை நடைபெறுகிறது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில் இலங்கையும் ஒன்று. உங்களது தாயகத்தில் இனப்படுகொலை நடக்கிறது என்பதை உலகிற்கு அறிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று நாம் நம்புவோம்.ஒரு நாட்டின் மக்களை காப்பாற்றுவதில் யாருக்கு பொறுப்பு உள்ளது என்ற ஒரு தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு சபைக் கூட்டதில் எழுப்ப மெக்ஸிகோ தூதர் கிளாட் ஹெலன் முயற்சி செய்தார்.தெற்காசியாவின் புவியியலையே மாற்றும் வல்லமை கொண்டவரின் மகன் சார்லஸ் அவர்களே, நீங்கள் உங்கள் போராட்டத்தை தொடர்வீர்கள் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.நான் உங்களுக்கு கூறுவது இதுதான், கொசோவா விடுதலை அடைந்ததும் நான் கூறியதும் இதுதான்.

சீக்கியர்களின் 10-வது குரு, குரு கோபிந்த் சிங் அவர்களின் வாக்குதான் அது.‘யாரும் உங்களுக்கு விடுதலையை தட்டில் வைத்துக் கொடுக்க மாட்டார்கள்; அதைப் பெற்றவர்கள், தங்களுடையை சொந்த முயற்சி, துணிவு, உறுதி, வலிமையாலேயே பெற்றார்கள்’ என்பது தான் அந்த வாசகம்.விரைவில் அல்லது காலம் தாழ்த்தியோ நீங்கள் அதை அடைவீர்கள்.இந்த தலைமுறையிலேயே நீங்களும் உங்கள் மக்களும் விடுதலையை அடைவீர்கள் என வாழ்த்துகிறேன். எல்லாம் வல்ல இறைவன் தமிழ் மக்களுக்கு ஆசி வழங்கட்டும். அவர்களது துன்பத்தை நிறுத்தட்டும். இந்த உலகில் சுதந்திர மக்களாக அவர்கள் தலை நிமிர்ந்து நிற்கட்டும்.

                                                                      உண்மையுள்ள ....

 ன்றி : naamtamilar.org                                        ஜக்மோகன் சிங்

வெள்ளி, 1 அக்டோபர், 2010

நார்வேயின் இன்னொரு முகம் ....


“ஒவ்வொரு மனிதனுக்கு இரண்டு முகங்கள் உண்டு, அதில் ஒன்றைத்தான் சமூகத்திற்குக் காட்டுகின்றான், மற்றொரு முகத்தை மறைக்கின்றான். அதற்காக அவன் படும்பாடு கூட ஒரு போராட்டமாகிறது .  இலங்கை  அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்தித்தப் பிறகு நார்வே அந்த நாட்டின் அயல் உறவு மேம்பாட்டு அமைச்சர் எரிக் சோல்ஹீம் ஈழத் தமிழர்களுக்குக் கூறிய அறிவுரை அந்த வசனத்தைத்தான் நினைவிற்குக் கொண்டு வந்தது.

ஐ.நா.அவை இந்த புத்தாயிரமாண்டு பிறப்பின்போது வறுமையை ஒழிக்க நிர்ணயித்த புத்தாயிரமாண்டின் மேம்பாட்டு இலக்குகள் (Millennium Development Goals _ MDG) எந்த அளவிற்கு எட்டப்பட்டுள்ளன என்பது குறித்த மாநாட்டில் கலந்து கொள்ள நியூயார்க் வந்துள்ள இலங்கை அதிபர் ராஜபக்சவை நார்வே பிரதமர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பர்க்கும், அயலுறவு மேம்பாட்டு அமைச்சர் எரிக் சோல்ஹீமும் சந்தித்துப் பேசியுள்ளனர். 

இந்த சந்திப்பின்போது, போரினால் பாதிக்கப்பட்ட வட கிழக்குப் பகுதிகளில் சாலைகள் போடுவது உள்ளிட்ட உள்கட்டமைப்புகளை மீண்டும் ஏற்படுத்தும் பணியில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது என்றும், அந்த பணியில் நார்வே அரசும் ஈடுபட வேண்டும் என்று அதிபர் மகிந்த ராஜபக்ச கேட்டுக்கொண்டுள்ளார். 

அதுமட்டுமல்ல, ஹம்பன் தோட்டாவை மேம்படுத்தும் திட்டத்திற்கு முதன் முதலில் நார்வே உதவியதையும் அவர்களிடம் சுட்டிக்காட்டிய ராஜபக்ச, தற்போது நாட்டில் அமைதி நிலவுதால் சாலை கட்டமைப்பும், உள்கட்டுமானங்களும் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். இலங்கையில் நார்வே முதலீடு செய்வது குறித்து இரு தலைவர்களும் பேசினர் என்றும் இச்சந்திப்பு குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் விளக்கிய இலங்கை அதிபரின் ஊடக ஒருங்கிணைப்பாளர் விஜனந்த ஹெராத் கூறினார் என்று அச்செய்தி கூறுகிறது.
இதற்குப் பிறகு ஹெராத் கூறிய விஷயங்கள்தான் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன.

“அதிபருடன் நடந்த விவாதத்தில் கலந்து கொண்ட நார்வே அமைச்சர் எரிக் சோல்ஹீம், இலங்கை அரசு குறித்து புலம் பெயர்ந்த தமிழர்கள் கொண்டுள்ள கருத்து மாற வேண்டும். இப்போது உருவாகியுள்ள புதிய ஜனநாயகப் பாதையில், நாடாளுமன்றத்தின் வாயிலாக தங்கள் பிரச்சனைக்குத் தீர்வு காண முன்வர வேண்டும்” என்று கூறியுள்ளதாக ஹெராத் தெரிவித்துள்ளார்.

இது சிங்கள ஊடகங்களில் வந்துள்ள அதிகாரபூர்வமான செய்தியாகும். இது தவிர, எரிக் சோல்ஹீம் கூறியதாக கிடைக்கும் செய்திகள் மேலும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் அளிக்கின்றன.

“அதிபர் மகிந்த ராஜபக்ச சர்ச்சைக்குரிய ஒரு தலைவர்தான். ஆனால் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவர். மக்களின் பேராதரவையும், அமோக வாக்குகளையும் தேர்தலில் பெற்று அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மிகவும் செல்வாக்கான அரசியல் தலைவர் அவர் என்பதை மாற்றுக் கருத்துகளுக்கு அப்பால் ஏற்றுக் கொள்ள வேண்டி உள்ளது. 

அதிபர் மகிந்த ராஜபக்சவும் நார்வேயுடன் நல்லுறவை ஏற்படுத்திக்கொள்ள பேரார்வமாக உள்ளார். தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். அதிபர் ராஜ்பக்சவுடன் ஒத்துழைக்கின்றமையே அதற்கான ஒரேயொரு மார்க்கமாக உள்ளது. தமிழர்கள் எதிர்காலத்தைச் சிந்தித்து செயற்படுதல் வேண்டும். ஆட்சியில் இருப்பவர்களுடன் இணங்கி நடக்க வேண்டும்” என்று கூறியுள்ளதாகவும் சில ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.

இனப் படுகொலையை எப்படி மறப்பது? 

இலங்கை  அரசுடன் ‘நல்லுறவு’ ஏற்படுத்திக் கொள்ள நார்வே அரசு நினைத்தால் அதற்கு தமிழர்களோ மற்றவர்களோ குறுக்கே நிற்க முடியாது. அது அந்நாட்டின் வணிக, பொருளாதார தேவை நிமித்தமானதாக இருக்கலாம். 

அதே நேரத்தில் தமிழர்களுக்காக நின்ற நார்வேயை, அதே பொருளாதார காரணத்தைக் காட்டி தன் பக்கம் இழுக்க ராஜபக்ச முயற்சிப்பது அவருடைய தேர்ந்த இராஜதந்திரம் என்பதிலும் சந்தேகமில்லை.

ஆனால், இறுதிக் கட்டப்போரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து ஐ.நா.விசாரணை நடத்த முற்பட்டுள்ள நிலையில், மனித உரிமை குறித்தும், ஈழத் தமிழர்களின் நியாயமான அரசியல் சம உரிமை குறித்தும் நியாயமான ஆதரவுப் போக்கை கடைபிடித்த நார்வே அரசு, இன்று தனது வசதிக்காக தமிழர்கள் ராஜபக்சவுடன் இணைந்து செயலாற்ற முன்வர வேண்டும் என்று கூறுவது எப்படி நியாயமாகும் என்று புரியவில்லை.

அரசியல் சம உரிமைப் பெற ஒரு நீண்ட நெடிய போராட்டத்தை சாத்வீக வழியிலும், ஆயுதம் தாங்கியும் நடத்தி, அதற்காக அளப்பரிய தியாகம் செய்த தமிழர்களை, தங்கள் சொந்தங்கள் மூன்று இலட்சம் பேரை சிங்கள இனவெறி அரசின் வெறிக்கு உயிர்பலித்தந்த மக்களை, அதே இனப் படுகொலையாளனுடன் ஒத்துப் போகச் சொல்வது எந்த வகையில் நியாயம்? 

2007 முதல் இரண்டரை ஆண்டுக்காலம் நடந்த இனப் படுகொலைப் போரில் தெற்காசிய வல்லாதிக்கங்களின் துணையுடன், சீனா, ரஷ்யா போன்ற வல்லரசுகள் அளித்த தடை செய்யப்பட்ட பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்தி, மக்கள் பாதுகாப்பு வலயத்திற்கு வரச்சொல்லிவிட்டு அங்கு அந்த குண்டுகளை வீசி ஒன்றரை இலட்சம் பேரை படுகொலை செய்த ஒரு அரசியல் தலைவன், அவன் பெரும்பான்மை மக்களின் ஆதரவு பெற்று வெற்றி பெற்று பதவியில் அமர்ந்துள்ளான் என்று ஒரே காரணத்திற்காக ‘நீங்களும் ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்று கூறுவது ஈனத்தனமான அரசியல் அல்லவா?

ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்தவனிடம் சென்று, “நாடாளுமன்றத்திற்குட்பட்டு உங்கள் பிரச்சனைக்குத் தீர்வு காணுங்கள்” என்று பாசிசத்தை எதிர்த்த ஐரோப்பிய நாடான நார்வே கூறுகிறது! நல்ல வேளை இப்படிப்பட்ட ‘மகாத்மா’க்கள் ஹிட்லர் காலத்தில் பிறந்திருக்கவில்லை. இல்லையென்றால், ஐரோப்பாவை கபளீகரம் செய்த நிலையில், ஹிட்லர் முன் மண்டியிட்டு ‘எல்லாவற்றையும் மறந்துவிட்டு எல்லோரும் ஒன்றுபடுவோம்’ என்று கூறியிருப்பார்கள்.

ஐ.நா.வின் பன்னாட்டு மனித உரிமைப் பிரகடனம், இனப் படுகொலைக்கு எதிரான ஐ.நா. பிரகடனம், தன் நாட்டு மக்களை காப்பாற்றும் பொறுப்பை கைவிட்ட பிரகடனம், வாழ்வுரிமைக்கான ரோம் பிரகடனம் என்று இந்த உலகில் மனித குலத்தின் மாட்சிமையை காப்பாற்றும் பிரகடனங்கள் அனைத்தின் படியும் குற்றம் சுமத்தப்பட்டு தலை குனிந்து நிற்கும் ஒரு இனப் படுகொலையாளனான ராஜபக்ச முன்பு நார்வே மண்டியிடுகிறது!

மனித உரிமை பிரகடனங்களில் உண்மையான அக்கறை அதற்கு இருந்திருக்குமானால், அந்த நாட்டின் பிரதமர் ஜென் ஸ்டோல்டன்பர்கும், எரிக் சோல்ஹீமும் மகிந்த ராஜபக்சை சந்தித்திருப்பார்களா? 

ஐரோப்பாவின் மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் (பெயரை திட்டமிட்டுத் தவிர்க்கின்றோம்) கூறினார்: “ஈழப் பிரச்சனையை நார்வே உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் கை கழுவி விட்டன. இதற்கு மேல் அவர்கள் உங்களுக்காக நிற்க மாட்டார்கள்” என்றார். அதுதான் இன்று நடக்கிறது.

1998ஆம் ஆண்டுமுதல் அமைதிக்கான அனுசரணையாளராக நார்வே செயல்பட்டதெல்லாம் இராஜதந்திர நடிப்பா? அதுதான் நார்வே என்றால், இந்த நார்வே வேறா? அல்லது இதுதான் நார்வேயின் உண்மை முகமா? தமிழரின் உரிமைப் போராட்டதின் நியாயத்தை உணர்ந்து செயல்படுவது போல் காட்டிக்கொண்டு அவர்களோடு இருந்து காட்டிக் கொடுத்துள்ளதா நார்வே? ஆயிரம் கேள்விகள் எழுகின்றன.

ஆனால் ஒன்று, நார்வே அல்ல, ஐரோப்பிய ஒன்றியம் அல்ல, அமெரிக்காவோ கனடாவோ அல்ல, இந்த உலகமே ஒன்றிணைந்து அந்த இனப் படுகொலையாளனுக்கு ஆதரவாக நின்றாலும், அவனை எதிர்த்து தமிழர்கள் ஒன்றுபட்டு நிற்கிறார்கள் என்கிற உண்மை நார்வே நாட்டிற்கு தெரிந்திருக்கவில்லை.

இலங்கை மண்ணில் ஒரு தேசிய இனமாக உள்ள தமிழர்களை மைனாரிட்டி என்று கூறலாம். ஆனால், இலங்கையின் அண்டை மண்ணாக இருக்கும் தமிழகத்தில் தமிழர்களின் எண்ணிக்கையும், எண்ணமும், சிங்களத்தின் மெஜாரிட்டிக்கு என்றென்றைக்கும் சவாலாக இருக்கும். தமிழீழப் பகுதியில் அமைதி நிலவாமல், அங்கு தமிழர்களின் கண்ணியத்திற்கு உத்தரவாதமில்லாமல், அதனை உறுதி செய்யும் ஒரு நாடு பிறக்காமல் சிங்கள இலங்கையில் இன்று நிலவும் இவர்களும் கூறும் அந்த ‘அமைதி’ நிலைக்காது.

ஏனெனில், நியூஸீலாந்து நாட்டின் நீதிமன்றம் உறுதி செய்ததுபோல், ஈழத் தமிழர்கள் அந்நாட்டு அரசை எதிர்த்து நடத்தியது விடுதலைப் போராட்டமே. 

நார்வே போன்ற நாடுகள் ஒப்புக் கொண்டாலும் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் -  ஒரே தீர்வு 
தமிழீழ விடுதலை மட்டுமே.
                                                                                                    நன்றி : வெப்துனியா