இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 18 மார்ச், 2011

மூத்திர குடியர்கள் - கவிதை - பாலமுரளிவர்மன்



அவர்கள்
ஆண் (அ)சிங்கங்கள்

அணி சேர்ந்தார்கள்

ஆளுக்கொரு நிறத்தில்
துண்டு அணிந்தார்கள்

இறுக்கி பிடித்தபடி
முறுக்குடன் நடந்தார்கள்!

கண்ணீர்
சிறுநீர்
இரண்டுக்கும்
பாலினம் இல்லை என்பது
அவர்களது சிந்தாந்தம்

தாகம் தணிக்க
எதையும் குடிக்கலாம் என்பதே
அவர்கள் அறிந்த வேதம்!

நரியிடம் குடிப்பதா?
கழுதையிடம் குடிப்பதா?
காலோடு வழிவதா?
நாற்காலி
வீலோடு வழிவதா?
அதில் மட்டுமே கொள்கை குழப்பம்!

எனினும்
எப்போதும் தயாராய்
குனிந்தே இருப்பார்கள்!

உற்றுப்பார்த்தால் தெரியும்

அவர்களது
முகத்திலும்
வாயிலும்
முன்னந்தலையிலும்
பதிந்தோடிய
சிறுநீர்த்தடமும்!

முகர்ந்து முகர்ந்தே
நிரந்தரமாகிவிட்ட
முகச்சுளிப்பும்!

நட்போடு சிரிக்கும்
நரி
இருப்பதில் சொட்டு சொட்டாய்
 நீர் பிரிக்கும்!

கழுதை
முன்னே போனால்
கடிக்கும்

பின்னே போனால் உதைக்கும்

எனவே
கீழே படுத்துக்கிடப்பதே
உசிதம் என்பது
உயர்மட்ட செயல்திட்ட குழு
எடுத்த சிறப்பு தீர்மானம்

இருந்தாலும்
கழுதையிடம் ஒரு பிரச்னை

அவர்கள் கேட்கும் போது
கால் தூக்காது
அதுவாக தூக்கும்போதுதான்
வாய்க்கும்
சில துளிகள்!

காலம் மறந்து
கீழே கிடந்தாலும்
கால் நீட்டி உதைக்குது
கழுதை!

நரியிடம் நீர்
வற்றி விட்டது!

தாகம்
நாக்கை வெட்டி இழுக்கிறது

நடைமாறி
தடுமாறி
அலைமோதின
இளைத்த ஆண் (அ)சிங்கங்கள்

மாபெரும்
சனநாயக
வனாந்தரத்தில்
நமக்கென்று
ஒரு சொட்டு
சொட்டாமலா
போய்விடும்!

சனநாயகத்தில்
நம்பிக்கை வைத்து
நடந்தன
ஆண் (அ)சிங்கங்கள்

பன்றியை தேடி.....